அப்துல்சலாம் யாசீம்-
ஹொரவ்பொத்தானை நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட முற்சக்கர வண்டி பெற்றோல் கசிவு காரணமாக இன்று (12) பிற்பகல் 2.30மணியளவில் தீப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. அனுராதபுரத்திலிருந்து -கோமரங்கடவெல பிரதேசத்திற்கு உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல வருகை தந்த தமுத்தேகம பகுதியைச்சேர்ந்த பெண்ணொருரின் முற்சக்கர வண்டியெனவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
தீப்பற்றிய முற்சக்கரவண்டி NC AAN-6529 எனும் இலக்கமுடையது எனவும் முற்சக்கர வண்டியை செலுத்தியநபர் ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

