யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது. வேன் சக்கரம் வெடித்துள்ளதை அடுத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.