நல்லாட்சி அரசே! நீதியை நிலைநாட்டுங்கள்

ஒலுவில் ஜெலில்
ல்லின மக்கள் வாழ்கின்ற இலங்கை திரு நாட்டில் நின்மதியாக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். நின்மதியற்று சிரமத்துக்கு மத்தியில் வாழ்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்தின் ஒரு சாரார் இது எங்கள் நாடு நாங்கள்தான் உரித்தானவர்கள் மற்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு இந்த நாட்டில் உரிமையில்லை என்பதுபோல் இனவாத கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கூறி பல வருடங்கள் யுத்தம் நடந்து பல்லாயிரம் உயிர்களையும் பலி கொடுத்தாலும். இனவாத நடவடிக்கைகள் அவர்களின் உள்ளத்தில் இருந்து மாறவே இல்லை.

அது யுத்தத்துக்கு முன் உள்ள காலம் என்றாலும் சரி. பின்னுள்ள காலம் என்றாலும் சரி உருவங்கள் வேறுபட்டாலும் உள்ளங்கள் தெளிவு அடைந்ததாக தெரியவில்லை.

அந்த வகையில்தான் பல்வேறுபட்ட பெயர் தாங்கிகள் இப்போது இந்த நாட்டின் வளர்ச்சியை தடுத்து இனங்களுக்கு இடையில் விரிசலை உண்டுபன்னி.

எப்போதுமே எந்த சந்தர்ப்பத்திலும் மூவின மக்கள் ஒன்று சேரக் கூடாது என்று நன்கு திட்டமிடப்பட்ட முறையில் இயங்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் உள்நாட்டில் இருக்கலாம் வெளிநாட்டிலும் இருந்து இயக்கலாம்.

இவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும் பாதிக்கப் படுவதும் படுகுழியில் செல்லுவதும் இந்த அழகிய நாடுதான் என்பது அந்த முட்டால்களுக்கு புரியாமல் செயற்படுகிறார்கள் என்பது வேதனையாக இருக்கிறது.

ஒரு இனம் இன்னொரு இனத்தை விட வியாபாரத்தில் என்றாலும் சரி. கல்வியில் என்றாலும் சரி. மேலோங்கி காணப்பட்டதனால் அவர்களை ஒடுக்குவதற்கும் அடக்கி ஆழ்வதற்கும் இந்த இனவாதிகள் எத்தனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அதனால்தான் முஸ்லிம் சமூகத்தின் மீது தேவையற்ற சாத்தியப் படாத குற்றங்களை கண்மூடித்தனமாக வைக்கிறார்கள்.

அப்படி இவர்கள் நினைப்பது போல் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர்கள் நாட்டின் சட்டங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று நினைத்தால்.

அதற்குத்தான் நாட்டின் சட்டம் இருக்கிறது நீதித் துறை இருக்கிறது அதனுடாக சென்று உரிய தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் அதுதான் ஜனநாயகமும் கூட.

"அதை விடுத்து தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனைப் போல்"

காவி உடை அனிந்த துனிச்சலில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வீதிக்கு வீதி ஊருக்கு ஊர் வலம் வருகிறார்கள். நாட்டை காப்பாத்துகிறோம் சமூகத்தை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில்.

மக்களின் நின்மதியை நாசம் செய்து கொண்டு.நாட்டையும் ஒரு அழிவு பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இதன் மூலம் சர்வதேசத்திலும் இந்த நாட்டுக்கு ஒரு மோசமான பெயரை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்த நாட்டிலே பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த எத்தனையோ அறிவாளிகள், அவதானிகள், ஆய்வாளர்கள், சட்ட வல்லுனர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கும் போது!

அவர்களுக்கு விளங்காது புரியாதது இந்த இனவாதிகளுக்கு புரிகிறது என்றால் ? இதில் மிகப் பெரிய சதி இருக்கு என்பது தெளிவாகவே புரிகிறது.

இந்த அழகிய தேசத்தில் இருக்கும் வளங்களையும் செல்வங்களையும் மூவின மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டு பயன்படுத்தினால். இந்த நாட்டின் வளர்ச்சியை கண்டு மற்ற நாடுகள் பொறாமை படுமளவுக்கு மாறும்.

ஆனால் அது நடக்குதா? என்று பார்த்தால் இல்லவே இல்லை? எல்லாமே தலைகீழாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் அன்றிலிருந்து இன்றுவரை. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் கலங்கம் விளைவிக்காமலும். மாற்று மத மக்களையும் மதித்து. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களோடு இணைந்து சட்டத்தை மதித்து வாழ்ந்து வருவதோடு! நாட்டின் வளர்ச்சிக்கும் இயன்றவரை பங்களிப்பு செய்துள்ளார்களே தவிர.

நாட்டை காட்டிக் கொடுக்கவோ துண்டாடவோ முயற்சிக்கவுமில்லை. யாருக்கும் துணை போகவுமில்லை. வரலாரை புரட்டி பார்த்தால் கூட தெரியும். இந்த வீதிக்கு வீதி கூக்குரல் போடுபவர்களுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பை பத்தி.

ஏன் நாட்டுக்காக உயிர் தியாகம் கூட செய்த வரலாறும் உண்டு முஸ்லிம்கள்.
ஆனால் திட்டமிட்டு அதையெல்லாம் மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையாக இருக்கு.

இதையெல்லாம் கண்டும் கானாது போல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் யார் மீதோ மறைமுகமாக குற்றங்களை போட்டு கொண்டு. காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த நல்லாட்சி என்பதுதான் கவலையாய் உள்ளது மக்கள் மத்தியில்.

சிறுபான்மையர்களின் முழு ஆதரவுடன் வந்த நல்லாட்சி. இப்போது அந்த மக்களின் நம்பிக்கை இழக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருப்பது.

"நம்ப வைத்து கழுத்தறுப்பது போல் உள்ளது" 

நாங்கள் முழு ஆதரவை கொடுத்தோம் என்பதற்காக உங்களிடம் நாட்டை கேட்கவில்லை! பதவிகளை கேட்கவுமில்லை! மாறாக மற்ற மக்களைப் போல் நின்மதியாகவும் பாதுகாப்புடனும் எங்கள் மார்க்கம் காட்டித்தந்த முறைப்படி. ஒற்றுமையோடு வாழ பக்கசார்பற்ற நீதியான பாதுகாப்பை கொடுங்கள் என்றே! எங்கள் உரிமையை கேட்கிறோம்.

முஸ்லிம் சமூகம் ஆண்டாண்டு காலம் சிங்கள,தமிழ் சமூகத்துடன் நெருங்கிய உறவோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறவர்கள். இனியும் வாழ வேண்டும்மென ஆசைப்படுகிறவர்கள்.
ஏன் மரணிப்பதாக இருந்தாலும் இந்த அழகிய நாட்டிலே மரணிக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழ்பவர்கள்தான் முஸ்லிம்கள்.

மாண்புமிகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களே! நீங்கள் இந்த நாட்டின் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள் என்ற வகையில். நல்லாட்சி என்ற பெயர் உண்மையாக இருந்தால் மூவின மக்களுக்கும் நடு நிலையான நீதியை நிலை நாட்டி பாதுகாப்பை உறுதி செய்து. முஸ்லிம்,சிங்கள,தமிழ் என்று எல்லோரும் தத்தமது மதத்தின் படி ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டையும் நல்லதோர் வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்ல வழி அமைத்து கொடுங்கள்.

இல்லாவிட்டால் இந்த அழகிய நாட்டை நாசம் செய்ய துடிக்கும் ஒரு சில குள்ளநரி குழுக்களின் ஆட்டத்துக்கு பயந்து. அவர்கள் போடும் கூத்துக்களையும் மற்ற மார்க்கத்தை தான் தோன்றித்தனமாக வாய்க்கு வந்தது போல் வசைபாடுவதையும் பார்த்துக் கொண்டு சட்டத்தின் முன் அவர்களை நிறுதாமல் கண்டும் கானதுபோல் இருந்தால்.

கடந்த ஆட்சியை விடவும். இந்த நல்லாட்சியே மக்களுக்கு பாதுகாப்பு அற்ற ஆட்சி என்று கூறுவதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அது மட்டுமா இந்த அழகிய தேசத்தில் இனங்களுக்கிடையில் பாரிய இன முருகல் ஏற்பட்டு.மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதையல்லாம் ஏற்படுத்தி கொடுத்த பெருமை உங்கள் தலைமையில் உள்ள இந்த நல்லாட்சிக்கே சேரும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே தயவு செய்து அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து. மீண்டும் ஒரு இன கலவரத்தை உண்டாக்கி வேடிக்கை பார்த்து விடாமல். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி நாட்டை சீரான நிலைக்கு கொண்டுவாருங்கள். அப்போதுதான் உங்கள் ஆட்சியும் நிலைக்கும் மக்களும் நின்மதியாக வாழ்வார்கள் நாட்டில் ஒற்றுமையாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -