கிண்ணியா துறையடியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சட்ட விரோத கட்டிடத்தை நிறுத்த அரசாங்க அதிபர் உத்தரவு

கிண்ணியாவின் புதிய நீண்ட பாலம் நிர்மாணிப்பதற்கு முன் பிரதேச மக்கள் கிண்ணியா துறையடினூடாக படகு (பாதை) பயன்படுத்திய வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இடஒதுக்கீடு பகுதியில் கடந்த சில வாரங்களாக நிர்மாணிக்க பட்டு வந்த சட்ட விரோத கட்டிடம் புத்தர் சிலை வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வந்தன.

 குறித்த அனுமதி பெறப்படாத வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியில் சட்ட விரோத கட்டிடம் அமைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் 15.12.2016 திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டதை அடுத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த கட்டிடம் தொடர்பாக அரசாங்க அதிபரை நோக்கி இந்த நல்லாட்சியில் சமூக ஒற்றுமைக்கு மத்தியில் இவ்வாறான செயற்ப்பாடுகளை மேற்றுக்கொள்வது பொருத்தமற்றது.

 கிண்ணியா வரவேற்பு கோபுரத்தில் முஸ்லிகளின் கலாச்சார சின்னங்கள் பிரதி பளிக்ககூடாது என பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது நியாயமாக இருந்தால் குறித்த சட்ட விரோத சிலை வைப்பு எந்த விதத்தில் நியாயமானது என்று கேள்வி எழுப்பியதுடன் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியலாளரை நோக்கி
குறித்த விடயமாக உடன் நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரால் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள பிரதி போலீஸ் மா அதிபருக்கு குறித்த சீனக்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணித்து சட்ட விரோத கட்டிடத்தை உடன் நிறுத்தும்படி உத்தரவிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -