ஜெயலலிதாவின் நினைவால் மாற்று திறனாளி வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை -படம்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த அக்கரை பாளையம், குப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்தான். இவரது மகன் பழனிச்சாமி(வயது40). மாற்றுத்திறனாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. தமிழக அரசின் உதவிப்பணம் இவருக்கு வருகிறது.

பழனிச்சாமி தீவிர அ.தி.மு.க.தொண்டராக செயல்பட்டு வந்தார். ஜெயலலிதா மறைவு செய்தியை கேட்டதில் இருந்து பழனிச்சாமி மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார்.

கடந்த 9-ந் தேதி தாழ்குனி கிராமத்தில் நடந்த மவுன ஊர்வலத்தில் கலந்து கொண்டு மொட்டைஅடித்து கொண்டார். அவரது பெற்றோர்கள் பழனிச்சாமிக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பழனிச்சாமி வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். முதல்வர் ஜெயலலிதா உருவபடத்தை நெஞ்சில் அணைத்தபடி கிடந்தார்.

இந்த நிலையில் வெளியே சென்ற அவரது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்து பழனிச்சாமி மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பக்கது வீட்டில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டமாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -