இண்டர்போல் ஆபீசரானார் நடிகர் அஜித் குமார்...

ஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஜோரியன் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். அவர் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதைப் பார்த்து வியந்துபோன ஜோரியன், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசனும் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -