ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று 08.12.2016 பாராளுமன்றத்தில் இனத்துவேச அமைப்புக்களுக்கு எதிராகவும், இந்த நாட்டில் தற்பொழுது நடை பெற்று வருகின்ற நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்று வருகின்ற இஸ்லாமிய சட்டதிட்டங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக ஆற்றிய உணர்ச்சி மிக்கதும், தூர நோக்கு சிந்தனை உடையதுமான உரையினை பார்க்கின்ற பொழுது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மறு பிரவேசம் எடுத்து விட்டார் என்பது போல் இருந்தது என தெரிவிக்கின்றார் முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.ஏ.கபூர்.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த கபூர்.. கலை பிரிவில் கண்டி பேராதனை பல்கலை கழகத்தில் தனது பட்டப்படிப்பினை முடித்த ஹிஸ்புல்லாஹ் அதற்கு பிற்பாடு சென்னை பல்லகலை கழகத்தில் தனது எம்.ஏ. பட்டத்தினை நிறைவு செய்கின்றார். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட இடமாக கருதப்படுகின்ற காத்தான்குடி நகரில் பெரும் தலைவர் அஸ்ரப்பினால் இனம் காணப்பட்ட இளைஞனாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் உள்வாங்கப்பட்டு 1987ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச சபை உறுப்பினராகவும், அதற்கு பிற்பாடு இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வினை நோக்கியும் வடகிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க கூடிய வரும்கால தலைவன் என்ற பெரும் தலைவரின் சிந்தனையில் உதித்த துடிப்பான இளைஞனாக கால் எடுத்து வைக்கின்றார்.
அக்காலகட்டத்திலே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கால தலைவன் என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களும் ஹிஸ்புல்லாவை துடிப்பான அரசியல் தலைவன் என்று பேசிய வரலாற்றினை எவராலும் மறுக்க முடியாது. அவ்வாறு பெரும் தலைவர் அஷ்ரஃப் அன்று கூறிய வார்த்தைகளே நேற்று பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா ஆற்றிய உரையானது நிரூபித்து காட்டும் விடயமாக ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகத்தினாலும் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களாலும் பார்க்கப்படுகின்றது.
1989ம் ஆண்டு முதன்முதலாக ஓர் துடிப்பான இளைஞனாக பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்த ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி சிரேஸ்ட்ட உறுப்பினராக பாராளுமன்றத்தில் இருந்து வருகின்றார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவரான ஹிஸ்புல்லா தற்போதைய முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் ஹக்கீமுக்கு வயதில் குறைந்தவராக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையிலும், ஹக்கீமிற்கு முதல் தான் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தவன் என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரசினை வழி நடாத்தி செல்ல கூடிய அரசியல் தலைவன் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரசினை உறுவாக்கிய மண்னான காத்தான்குடி மண் பெருமைபட்டுகொள்வதில் எந்த தப்பும் கிடையாது என்பது எவறாலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இது ஒரு புறமிருக்க நேற்று பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லா ஆற்றிய உரையானது சமகாலத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் அல்லது தற்போதைய கட்சியின் தலைமை கட்டாய விட்டுகொடுப்பு செய்து கட்சியின் தலைமையானது கிழக்கில் யாரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு நேரடி விடையினை முஸ்லிம் சமூகம் பெற்று விட்டது என்பதனையே முக்கியமாக ஹிஸ்புல்லாவின் உரையானது வெளிச்சம் போட்டு காட்டும் விடயமாக அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையோடு முறண்பட்ட நிலையில் கட்சியினை விட்டு வெளியேறிய மற்றும் அதிருப்தியுடன் இருக்கும் அரசியல் தலைவர்களாக முன்னாள் இன்நாள் அமைச்சர்களாக அதாவுல்லா, றிசாட் பதுர்டீன், ஹசன் அலி, பசீர் சேகுதாவூத், அமீர் அலி, சேகு இஸ்ஸடீன்,நஜீப் ஏ மஜீத், டாக்டர் இல்லியாஸ், சுந்தமூர்த்தி அபூபக்கர், போன்றவர்கள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் மீள்வருகை செய்து ஒருமித்த குரலில் கட்சியினை தலைமைத்துவத்தினை மாற்ற நினைப்பார்களாயின் அதற்கு கிழக்கில் தகுதியானவர் ஹிஸ்புல்லாவினை விடவும் எவரையும் சிரேஷ்ட்ட உறுப்பினர்களாக கருத முடியாது.
ஹிஸ்புல்லாவின் அரசியல் சாணக்கியம் கலந்த நேற்றைய (08.12.2016) பாராளுமன்ற உரையினை வைத்து இலங்கை முஸ்லிம்களும், குறிப்பான கிழக்கு மாகாண முஸ்லிம்களும் தூர நோக்கு சிந்தனையுடன் பார்க்க வேண்டிய அதே இடத்தில் அரசியல் காற்புணர்ச்சி கொண்ட ஹிஸ்புல்லாவின் அரசியல் எதிரிகள் பச்சோந்திகளாக மாறி சமூகத்தினை குறுகிய இலாபங்களுக்காக காட்டிக்கொடுக்கும் செயல்களில் இருந்து முற்றாக விடுபட வேண்டும் எனவும், ஹிஸ்புல்லா தான் ஆற்றிய உரையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதனை கூற முற்பட்டார் என்பதனை அரசியல் காற்புணர்ச்சிகளுக்கு அப்பால் நின்று சாதாரண கலீமா சொன்ன மனிதனாக அல்லாஹ்விற்கு பயந்து முகநூல்களிலும் சமூக வலைத்தளங்களும் தங்களினுடைய கருத்துக்களை வெளிப்படுத்துமாறு வேண்டிக்கொண்டார் வாழைசேனை பிரதேச சபை முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.ஏ.கபூர்.
