ஜெயலலிதா மறைந்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் குமார் ஓடோடி வந்தார். நேற்று அதிகாலை ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மறைந்த நடிகரும், பத்திரிக்கையாளரான சோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து முதல்வர் பன்னீர் செல்லவத்தை நடிகர் அஜித்குமார் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து துக்கம் விசாரிக்க சந்திக்கும் விதமாக இருக்கும்.
அரசியில் நிலவரம் எதுவும் பேசப்படாது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் முதல்வர் பன்னீர் செல்வம் இடையிலான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதாவால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவர் அஜித் சில வேளை சமகால குழப்பத்திற்கு முற்றுப் புள்ளியாக இச்சந்திப்பு அமையலாம் என பரவலாக கூறப்படுகிறது..
