சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர்.
பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.