சுலைமான் றாபி-
சாய்ந்தமருது கிங் கோர்சஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 48அணிகள் பங்கு கொள்ளும் அணிக்கு 07 பேர் கொண்ட மென்பந்து மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (16) சாய்ந்தமருது பெளசி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
சாய்ந்தமருது கிங் கோர்சஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே. ஜெயநிதி, கௌரவ அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார், கல்முனை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி இந்திக அத்துலத் முதலி, கழக செயலாளர் ஏ.சி.எம். நிசார் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் விளையாட்டுக் கழகங்களின் வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் கல்முனை பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரி ஜே.எஸ்.கே. ஜெயநிதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிசார் ஆகியோர்களுக்கு கிங் கோர்சஸ் விளையாட்டுக் கழகம் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னங்கள் வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.