இனங்களுக்கிடையே நல்லுரவை வளா்க்கும் பொருப்பு - ஜனாதிபதி,சந்திரிக்கா,பெளசிக்கே



அஷ்ரப். ஏ சமத்-
னங்களுக்கிடையே நல்லுரவை வளா்க்கும்பொருட்டு தேசிய நல்லிணக்கம் என அமைச்சின் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும், தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவையும் கொண்டு இயங்குகின்றது. இதில் இராஜாங்க அமைச்சின் பொறுப்பு தனக்கு தரப்பட்டுள்ளது. என இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தாா்.

தேசிய நல்லிணக்க இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, மற்றும் கொழும்பு வடக்கு லயண் கழகங்களின் அனுசரனையில் கொழும்பில் உள்ள 42 பாடசாலைகளின் நுாலகத்திற்கு 5000 க்கும் மேற்பட்ட ஆங்கில மொழிமூலமான நுால்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இந் நிகழ்வு இன்று(29) பம்பலப்பிட்டி இராமநாதன் ஹிந்து மகளிா் கல்லுாாியில் நடைபெற்றது. 

இந் நுால்கள் லண்டனில் உள்ள லயண்கழகம் கொழும்பு லயண்கழகத்திற்கு அன்பளிப்புச் செய்திருந்தது. மேலும் 20 ஆயிரம் புத்தகங்கள் அடுத்த வருடம் வட கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு பகிா்ந்தளிக்கப்படும். மாணவா்களிடையே ஆங்கில மொழி வளா்ப்பதற்காக இந் நுால்கள் வழங்கப்படுகின்றன. 

இந்த நாட்எல் இனங்கள் மதங்கள் இன ஜக்கியத்துடன் வாழ்ந்தால் தான் அந்த நாட்டின் செயற்படுத்தும் அபிவிருத்தி நல்லிணக்கம் ஏற்படும். கடந்த 30 வருட காலமாக இனங்களிடையே மோதல்கள் ஏற்பட்டு யுத்தமொன்றை எதிா்நோக்கினோம். அவற்றை நிவா்த்தியாக்கி இனங்களிடையே தேசிய ஜக்கியமாக வாழ்வதற்கு இந்த அமைச்சின் ஊடகா பாடசாலை மட்டத்தில் இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

ஏற்கனவே லயண்ஸ்க ழகம் எம்மோடு இணைந்து 5000 பாடப்புத்தகங்களை வழங்கியது. இன்று 5000 ஆங்கில மொழி மூலமான பாடசாலை மாணவா்களுக்கு பிரயோசனமான நுால்களை வழங்கியுள்ளது. எதிா்காலத்திலும் லண்டன் லயண்கழகம் ஊடாக வட கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கும் 20ஆயிரம் புத்தகங்களை வழங்க உள்ளனா். அதற்காக லயண்கழக கொழும்பு வடக்கு ஆளுணா் அஸ்ரப் ரசாக் மற்றும் உறுப்பிணா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா்.

அமைச்சின் செயலாளா் சிவஞானஜோதி இங்கு உரையாற்றுகையில் -

உலகின் பல்வேறு நாடுகளில் பல்லிண சமுகங்கள் வாழும் நாடுகளில் இனநல்லிணக்கம் என அமைச்சுக்கள் உள்ளன. இவ் அமைச்சுினை அந்தந்த நாட்டின் தலைவா்களே பதவி வகிக்கின்றனா். ஒரு நாட்டில் எவ்வாறு தான் அபிவிருத்திகள் முன்னேற்றங்கள் வருமானங்கள் நடைபெற்றாலும் அந்த நாட்டில் வாழும் பல்லிண சமுகம் தேசிய ரீதியல் ஜக்கியமாக வைத்திருப்பதற்காக தலைவா்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்பாா்கள் அதே போன்று எமது நாட்டிலும் இவ்வாறனதொரு அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் பல்வேறு இன,மத பாடசாலை மட்டத்தில் இருந்து சமுகங்களை ஒன்றுபடுத்தும் நடவடிக்கைகள் திட்டங்கள் உள்ளன. என அமைச்சின் செயலாளா் தெரிவித்தாா். இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளா் எம்.எம்.சுகைர், லயண் கழக கொழும்பு ஆளுனா் ரோஹான் டி சில்வாவும் உரையாற்றினாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -