அக்குரணை, கட்டுகஸ்தோட்டை வீதிக்கு நடவடிக்கை - ஹலீம்

இக்பால் அலி 
க்குரணை நகரில் இருந்து கட்டுகஸ்தோட்டை செல்லும் வீதியில் கடுமையான வாகன நெருக்கடிகள் நிலவுகின்றன. இந்த வீதியில் அதிகமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் தினசரி பயணம் செய்கின்றனர். கூடுதலான வாகனங்கள் பயணிக்கின்றன. பொது மக்களும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் தம் அன்றாட சேவைகளைச் செய்கின்றனர். இதற்காக அவரச நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய மாற்றங்களுடன் அக்குரணை நகரை சகல வசதிகளும் கொண்டதாக அழகு படுத்த அபிவிருத்தி திட்டமிட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளதாக என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அக்குரணை நகரில் மீன் பிடி கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் கடை வர்த்தக நிலையம் திறந்து வைக்கும் வைபவம் 28-11-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

மழை பெய்தால் வெள்ளம் அடிக்கடி ஏற்படும் நகரமாக அக்குரணை நகரம் அமைந்துள்ளது. இதற்குக் கூடுதலான காரணம் இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளாகும். இது தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகள் செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகன வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவள்ளன. பிரதேச செயலகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் கூட உரிய முறையில் கவனத்திற் கொள்ளப்பட வில்லை. இதனால் நிர்மாணிக்கப்பட்ட கடையறைகள் மூடப்பட்டள்டுள்ளன. எதிர் காலத்தில் அதனையும் நவீனப்படுத்தி நாம் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

நாடு தழுவிய ரீதியில் மீன்கள் மலிவு விலைகளில் வழங்கப்படுகின்றன. மீன்கள் சுகாதார ஆரோக்கியமிக்க் உணவாகும். இவ்வருடம் நுகர்வோர்கள் மத்தியில் மீன்களின் பகாவனை அதிகரித்துள்ளது கட்ற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. மனிதர்களுக்கு போசாக்குமிக்க உணவாக மீன்களே உள்ளதாக வைத்தியதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நுகவோர்களுக்கு நியாயமான விலைக்கு காலடியில் பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -