மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரத்தில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை வேளைகளில் வீதிகளில் நடமாடிய 18 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் காத்தான்குடியில் 4 கடைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்த அதேவேளை மற்றும் வீடடொன்றிலும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதன் எதிரொலியாகவே இந்த அதிரடி நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.