NDPHR கட்சி ஏன் ACMC க்கு ஆதரவு..? : விளக்கம் கொடுக்கிறார் மொஹிடீன் பாவா

NDPHR கட்சி ஏன் ACMC க்கு ஆதரவு ,கொடுக்க முன் வந்தது என்று தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவிடம் வினவியபோது, அவர்கூறியதாவது:-

உண்மையில் நான் இக்கட்சியை ஆரம்பித்து மூன்று வருடம்களைத் தாண்டுகிறது இருப்பினும் இதுவரை எனது கட்சியின் கொள்கையான கிழக்கை ஒரு தொழில் பேட்டையாகவும் , ஏற்றுமதி வலயமாகவும் உருவாக்கும் திட் டத்துக்கு நான் பல முயட்சிகளை மேற் கொண்டும் முடியாது போயிற்று . அரசியல் செல்வாக்கு இன்றி தனித்து இயங்குவது காலத்தை வீணடிப்பதாகவே முடியும் என்று எனக்குத் தோன்றியது. 

இதன் எதிரொலியாக தற்கால அரசியல் களத்தை உன்னிப்பாக நோக்கினேன் . எனது திட்டம்களை நடைமுறைக்கு உதவக் கூடிய ஒரு அமைச்சு கைத் தொழில் வாணிப அமைச்சு என அறிந்து அத்துறை அமைச்சர் ரிஷாட் அவர்களை அணுகும் முறையை யோசித்துக் கொண்டிருந்த வேலை எனது கல்வி அனுபவ விபரங்களை அனுப்பி வைத்தேன் .பழம் நழுவி பாலில் விழுந்தது போல் உடனடியாக எனக்கு அழைப்பு வந்தது .

எழுதுவதும் பேசுவதும் மக்கள் சேவைக்கு ஒத்து வராது எனக் கருதி பல லட்சம் ரூபா ஊதியம் பெறும் தொழிலையும் விட்டு விட்டு நாடு வந்தேன். சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும்.என்பதை கருத்தில் கொண்டு எனது திடடம்களை நடைமுறைப் படுத்தவும் அதற் கு ரிய சகல உதவிகளையும் புரிவதாகவும் இணங்கிய அமைச்சர் ரிஷாட் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்தேன். சில முறை நான் அவரை சந்தித்த போது உண்மையில் அவர் நிர்வாகத் திறமை உள்ளவரே எனக் கண்டு கொண்டேன் . 

என்றாலும் எமது கட்சி தனித்தே இயங்கும் ,அதன் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதே எமது இறுதி ஆசை. இதை பிழையான கண் கொண்டு பார்ப்போர் அறிவீனர்களே . என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபர் மொஹிடீன் பாவா கூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -