கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்காக சபையில் அவசர பிரேரணை சமர்பித்து அன்வர் MPC முழக்கம்..!

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கிழக்கு மாகாணத்திலே அண்மைக்காலமாக கல்விக் கல்லூரியிலே நியமனம் பெற்ற ஆசிரியர்களை எங்களுடைய மாகாணத்தினை தாண்டி காலி, மாத்தளை அதே போன்று வட மாகாணத்திற்கும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பியிருப்பது என்பது கிழக்கு மாகாண பாடாசலைகளி இருக்கின்ற ஆசிரியர்களின் வெற்றிடத்தில் இஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளதான என்பது சம்பந்தமான கேள்வி எழத்தொடங்கியுள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வியற் கல்லூரியில் வெளியான ஆசிரியர்களை வெளி மாகாணங்கள்உக்கு அனுப்பி அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதானது மிகவும் மன வேதனை அளிக்க கூடிய விடயமாக உள்ளது.

குறிப்பாக கிழக்கில் இருக்கின்ற 1108 பாடசாலைகளிலே சுமாராக 5021 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற பொழுது கல்வி பணிப்பாளரின் தகவலின் படி இன்று ஆரம்ப பிரிவிற்காக 250 ஆசிரியர்களும், கணித பிரிவிற்காக 411 ஆசிரியர்களும் ஆங்கிலத்திற்காக 365 ஆசிரியர்களும், விஞ்ஞானத்திற்காக 36 ஆசிரியர்களும் இதர பாடசாலைகளுக்காகவும் வெற்றிடங்கள் காணப்படுவதாக அறிவித்துள்ளார். 

இவ்வாறாக தெரிவித்துள்ள அவர் ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்ற சம்பந்தமான இந்த தகவலுக்கும் பணிப்பாளரினால் வெளியிடப்பட்டுள்ள தகவலுக்கும் இடையிலே பாரிய வித்தியாசம் காணப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புல்மோட்டை அன்வர் நேற்று 06.10.2016 வியாழக்கிழமை இடம் பெற்ற கிழக்கு மாகான சபை .அமர்வில் ஆசிரியர்களின் நியமனம் சம்பந்தமான விஷேட அவசர பிரேரணையினை சமர்பித்து உறையாற்றும் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது அவசர பிரேரணை சமர்பித்து உரையாற்றிய புல்மொட்டை அனவர்… இவ்வாறான நிலையிலே கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இவ்வாறான அறிக்கைகள், சுட்டிகளை வைத்துக்கொண்டு கிழக்கு மாகண பாடசாலைகளில் உள்ள ஆளணியினை காட்டியதன் அடிப்படையில்தான் வெளி மாகாண பாடாசலைகளுக்கு ஆசிரியர்களை நியமித்துள்ளதாக எங்களுக்கு தெரிய வருகின்றது. எனவே இந்த விடயத்தினை பார்க்கின்ற பொழுது எங்களினுடைய நிலைமையினை அங்கிருக்கின்ற பணிப்பாளருக்கு எங்களால் நிரூபிக்க முடியும். குறிப்பாக புல்மோட்டை, குச்சவெளி நிலாவெளி, இரககண்டி,முள்ளிபொத்தானை,கின்னியா,முதூர் போன்ற பகுதிகளில் இருக்கின்ற பாடசாலைகளில் ஆசிரியர்களின் வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறமிருக்க, இறக்காமத்தில் ஆறு பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறான ஆசிரியர்களினுடைய வெற்றிடங்கள் நிரப்பப்பட்டிருந்தால் ஏன் இறக்காமத்தில் ஆறு பாடசாலைகள் இழுத்து மூடப்பட வேண்டும்? கடந்த 2008ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை உறுவாக்கப்பட்டதற்கு பிற்பாடு சுமாராக யுத்தினால் 80க்கு மேற்பட்ட மூடப்பட்ட பாடசாலைகள் மீழ திறக்கப்பட்டிருந்த அதே நேரத்திலே இவ்வாறு ஆசிரியர்களின் வெற்றிடங்கள் இம்மாகாணத்திலே இல்லை என்பதால் பாடசாலைகள் இழுத்து மூடப்படுவதற்கு யார் காரணம்? கல்வி அமைச்சா? ,கல்வி அமைச்சினுடைய மாகாண கல்வி பணிப்பாளரா? அல்லது கல்வி அமைச்சினுடைய செயலாளரா என்பது பற்றி எங்களுக்கு வினா எழுகின்றது.

கல்வி துறையானது எமது மாகாணத்தில் இன்னும் சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வரப்படவில்லை. கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் பொழுது இங்கிருக்கின்ற மாணவர்கள் ஆசிரியர்களினுடைய நிலைமை என்பது மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றது. உதாரணமாக சில படசாலைகளை எடுத்துக்கொண்டால் நகர் புறத்தில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களின் தகவல்களை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த ஆசியர்களினுடைய தகவல்களும் சரி என கூறுகின்றார்கள். கிராமபுறத்திலே சென்று பார்த்தால் அங்கே இருக்கின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கை இஸ்தம்பிதமாகி வீதிகளில் இறங்கிய ஆர்பாட்டங்களை நடத்துகின்ற நிலைமைகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது.

ஆசிரியர்கள் இம்மாணத்திலே சரியா முறையில் நிரப்பப்பட்டிருந்தால் ஏன் அவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் அவ்வாறான பாடசாலைகளில் இடம் பெற பெற வேண்டும்? எனவே இவ்வாறான விடயம் என்பது என்னை பொறுத்தமட்டில் இங்கிருக்கின்ற ஆசிரியர்கள் எங்களினுடைய மாகாணத்திற்கு சொந்தமானவர்கள், எங்களினுடைய மாகாணத்திலே கல்வி கற்றவர்கள். அவர்கள் எங்களினுடைய மாகாணத்திற்கான வளங்களாக பெறப்பட வேண்டும். இவ்வாறு இருக்கின்ற பட்சத்திலேதான் முன்னிலையில் இருந்த கிழக்கு மாகாண கல்வியின் நிலைமையானது தற்பொழுது பிந்தள்ளப்பட்ட நிலையில் இருக்கின்றது. 

இதற்கான பிரதான காரணம் எங்களுடைய வளங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு சென்று அந்த மாகாணங்களை உயர்த்தி தேசிய ரீதியில் குறித்த மாகாணங்களை முற்படுத்துகின்ற விடயம் ஒரு புறமிருக்க .கிழக்கு மாகாணத்தில் உள்ள எங்களுடைய வளங்களை வைத்து எமது கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்புவதில் தவறுகின்ற விடயங்களை பார்க்கின்ற பொழுது எங்களுடைய கிழக்கு மாகாண சபையும் எங்களுடைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் பொறுத்தமற்ற விடயமாக செயற்பட்டு வருக்கின்றது என நினைக்கின்றேன்.

ஆகவே எமது முதலமைச்சரும் மகாண கல்வி அமைச்சரும் இணைந்து இங்கிருக்கின்ற கடந்த நான்காம் திகதி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள எமது ஆசிரியர்களற மீண்டும் எமது மாகாண பாடசாலைகளுக்கு உடனடியாக இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாகாண கல்வி பணிப்பாளர் கூறியுள்ள அறிக்கைக்கும் இந்த மாகாணத்தில் காட்டப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் இடையிலே என்ன முரண்பாடு இருக்கின்றது? இதிலே மாகாண கல்வி பணிப்பாளரினுடைய கருத்து முரண்பாடானதா? மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியகளின் வெற்றிடங்கள் உண்மையானதா என்பது பற்றி எமது மாகாண கல்வி அமைச்சரானவர் உண்மையான அறிக்கைகளை கண்டறிந்து அதற்கான தீர்வினை முன்னெடுக்க வேண்டும்.

இன்னும் ஒரு பொறிமுறையின் கீழ் கொண்டு வரப்படாத கல்வி அமைச்சரின் நடவடிக்கை என்பது மாகாணத்திலே தலை குனிய வேண்டிய நிலைமையாக காணப்படுகின்றது. இது சம்பந்தமாக பல தடவைகள் மாகாண சபையிலே இவ்வாறான பிரேரணைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர் பற்றாக்குறை என்பது கிழக்கு மாகாணத்திலே ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. கடந்த 2008ம் ஆண்டு மாகாண சபை உறுவாக்கப்பட்டதற்கு பிற்பாடு சுமாராக 5000 ஆசிரியகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் இணைக்கபட்டும் இந்த மாகாணத்திலே உள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையும், பாடசாலைகள் கல்வியில் பின்தங்கிய நிலையுமே காணப்படுகின்றது.

இவ்வாறான எமது வங்களை வெளி மாகாண மாவட்டங்களுக்கு அனுப்புவது என்பதானது எமது கிழக்கு மாகாணத்தின் கல்வி துறையினை இன்னும் பின்னோக்கி கொண்டு செல்வதாகவே அமையும். இன்று முதலமைச்சரியுடைய காரியாலைத்தினையும் கல்வி அமைச்சருடைய அலுவலகத்தினையும் பார்க்கின்ற பொழுது ஆசிரியர்கள் இட மாற்றத்திற்காக வரிசைகளில் நிற்கின்றார்கள். இந்த நிலையில் இருக்கின்ற ஆசிரியர்கள் வெளி மாகாணங்களுக்கு சென்று எந்த மனோ நிலையில் கல்வி கற்பிற்க முடியும்? ஆகவே எங்களினுடைய வளங்களை எங்களினுடைய மாகாணத்தில் பயண்படுத்தி எங்களுடைய மாகாணத்தினை கல்வி துறையில் முதலாவது மாகாணமாக உயர்த்த வேண்டிய பொறுப்பு எமது மாகாண சபைக்கு இருக்கின்றது என்பதனை இங்கே ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன்.

மீண்டும் நான் கூறிக்கொள்ள விரும்புவதாவது எமது மாகாண கல்வி அமைச்சரானவர் குறித்த விடயத்திலே பொறிமுறை ஒன்றினை உறுவாக்க வேண்டும். ஏனைய மாகாண சபையிலே அதிகாரங்களை பெற்றவர்கள் அவர்களை தங்களினுடைய மாகாணத்தில் வெளியாகின்ற ஆசிரியர்களை தங்களுடைய மாகாணத்தில் வைத்து கற்பிக்க முடியுமாக இருந்தால் ஏன் எங்களுக்கு அவ்வாறு செய்ய முடியாது? ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதே போன்று அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக குறித்த ஆசிரியர்களை எமது மாகாணத்திற்கு நியமிக்க வேண்டும். 

அவர்களுக்கு எந்த தாமதமும் ஏற்பட கூடாது. அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள அதே வேலை எங்களினுடைய மாகாண சபையின் முதலமைச்சர், கல்வி அமைச்சர், ஆகியோர்கள் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இந்த மாகாணத்திற்கு மீண்டும் வந்து அவர்களுடைய சேவையினை வழங்குவதற்கு முதலமைச்சரும், கல்வி அமைச்சரும், அமைச்சர்கள் வாரியம், என அனைவரும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிகொள்ள விரும்புகின்றேன் இருதியாக இறுதியாக தெரிவித்தார்.

அத்தோடு கடந்த காலங்களில் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த கிழக்கு மாகாண சபையானது ஜனாபதி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படதனை போன்று குறித்த அவசர பிரேரணையானது புல்மோட்டை அன்வரினால் மாகாண சபையில் சமர்பிக்கப்பட்டு உரையாற்றப்பட்டதற்கு பிற்பாடு தற்போதைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டும் கல்வி அமைச்சரும் உஅடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு குறித்த விடயத்தினை சமர்பிப்பதற்காக உடன் புறப்பட்டதாக புல்மொட்டை அன்வர் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -