இன்று அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களின் போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு வடக்கு மற்றும் மத்திய மாகாணம் போன்ற மாகாணங்களுக்கு நியமித்துள்ளமை மிகப்பெரிய அநீதியாகும்.
அதிலும் திருமணம் ஆகாத முஸ்லிம் பெண் ஆசிரியர்களை வேண்டுமென்று இனவாதத்தின் அடிப்படையில் வேறு மாகாணங்களுக்கு நியமித்துள்ளதாகவே உலமா கட்சி காண்கிறது.
நல்லாட்சியின் வெற்றிக்காக 98வீதம் வாக்களித்த கிழக்கு முஸ்லிம்களின் ஆசிரியர்களுக்கு அதுவும் பெண்களுக்கு இப்படி நடந்துள்ளமை மிகப்பெரிய நன்றி கெட்ட தனமாகும்.
ஆகவே அரசாங்கம் அவர்களை தமது சொந்த மாகாணங்களில் நியமிக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.