சாய்ந்தமருது கிரிக்கட் சுற்றுப்போட்டியில் இலவன் ஹீரோஸ் அணி சம்பியன்..!

எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின் புதிய சீறுடை அறிமுக கடினப்பந்து கண்காட்சி கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்.

சாய்ந்தமருது ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்திற்கும், சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான 18 ஒவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினப்பந்து கண்காட்சி கிரிக்கட் சுற்றுப்போட்டியில் நாணையச் சுழச்சியில் வெற்றிபெற்ற இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்படுத்தாடி 18 ஒவர் நிறைவில் 3விக்கட்களை இழந்து 145 ஒட்டங்களை பெற்றது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஒஸ்மானியன் விளையாட்டுக்கழகம் அனைத்து விக்கட்களையும் இழந்து 17.4 ஒவர் நிறைவில் 98 ஒட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. சிறந்த ஆட்டநாயகனாக இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த வீரர் எம்.எம்.றிஸ்வின் தெரிவு செய்யப்பட்டதுடன், ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஏ.எம்.றிஷாட் மஜிடிக்கு சிறப்பு கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலந்துகொண்ட அதிதிகளுக்கு ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தினால் நினைவுச் சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் அணித் தலைவர் எம்.வை.எம்.அறபாத் தலைமையில் சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக தலைவரும் ஆசிரியருமான ஏ.எம்.நியாஸ், சாய்ந்தமருது சிங்கர் சோரூம் முகாமையாளர் எஸ்.எச்.ஜிப்ரி, சாய்ந்தமருது ஹமீடியா பத்திரிகை விற்பனை முகவர் நிலையத்தின் உரிமையாளர் எஸ்.சவூர்த்தீன், விளையாட்டுக் கழக வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்திற்கான புதிய சீறுடைகள் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அணுசரனையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -