புலமைபரிசில் பரீட்சை: நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப வித்தியாலயம் முதலிடம்

க.கிஷாந்தன்-
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப வித்தியாலய மாணவி தேவராஜ் லதுர்ஷிகா 186 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2016 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவராவார்.

இதேவேளை இதே வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான வீரரவி சதுர்ஷன் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேற்படி பாடசாலையில் 120 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இதில் 21 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி.எஸ்.வெலிங்டன் தெரிவித்தார்.

மேலும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன் கிஷான் கனிஷ்கர் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் 34 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -