நாட்டின் சகவாழ்வினை சிதைப்பதற்கு விக்னேஸ்வரன் முயற்சி - அமைச்சர் ரஞ்சித்

டமாகாண முதலமைச்சர் தனது பதவியினுடைய பொறுப்பினை ஒரு பக்கம் வைத்து, கடந்த சில நாட்களாக நடந்துகொண்ட முறை, இந்த நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் சகவாழ்வினை கடுமையான அச்சுறுத்தலுக்கு உண்டாக்கியுள்ளது. வடக்கிலுள்ள அடிப்படைவாதிகள் அவ்வாறு இனவாதத்தை பரப்ப முயற்சிக்கையில், தெற்கில் சிறிய தொகையிலான அடிப்படைவாதிகள் அவர்களது பிரதேசங்களில் அடிப்படைவாதத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர். இந்த இரு தரப்பினரதும் முயற்சிகளின் விளைவுகளை நாங்கள் 30 வருடங்களாக அனுபவித்தோம். அதன் மூலம் பாரிய சேதம் நாட்டுக்கு ஏற்பட்டது. கிழக்கு மாகாணத்திலுள்ள நீங்கள் அவற்றைக் கடுமையாக அனுபவித்துள்ளீர்கள். 

இந்த சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்த இந்த அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தாமல், இதனை ஆரம்பத்திலேயே இல்லாதொழிக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." என்று அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். உற்பத்தித்திறனை மாகாண மட்டத்தில் கொண்டு செல்வதற்காக அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் ​தேசிய உற்பத்தித்திறன் செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாண வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் சென்ற 30 ஆம் திகதி நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு மாகாணத்தின் சகல அரச நிறுவனங்களிலுமிருந்து அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "இன்று நாங்கள் 14 இலட்சம் அரச ஊழியர்ளை கண்காணித்து வருகிறோம். அரச ஊழியர்கள் அதிகரித்தால், சேவையின் தரம் அதிகரித்துள்ளதா என்ற கேள்வி நம்மிடம் கேட்கப்படுகிறது. அரசாங்க நிர்வாக அமைச்சர் என்ற வகையில் நான் நன்றாக அறிந்த விடயம், என்னுடைய அமைச்சின் கீழுள்ள ஓய்வூதியத்திணைக்களத்தின் நிலை என்னவென்று. இன்னும் அந்த இடத்தில் பைல்கள் மலை போல் குவிக்கப்பட்டு வேலை நடைபெறுகிறது. இதே முறைமையின் கீழ் வேலை நடைபெறுவதால் இன்றும் அரச ஊழியரொருவர் ஓய்வு பெற்றுச்சென்றால், பல மாதங்களின் பின்னரே அவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்நிலைமை மாற வேண்டிய காலம் வந்துள்ளது. 

சில நாட்களுக்கு முன் நானும் ஜனாதிபதி செயலாளரும் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அதில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த அரசாங்க நிர்வாக அமைச்சர்களுடன் கலந்துரையாடியதில் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் அரச சேவையில் வினைத்திறன் மிக்கவையாக இருப்பதற்கான காரணம் உற்பத்தித்திறன் கருத்தாக்கத்தினை சரியான முறையில் உபயோகிப்பதே ஆகும் என்று அறியக்கிடைத்தது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரச சேவையாளர்களான நீங்களும் நானும் அதற்காக உற்பத்தித்திறன் மிக்க சேவையினை அவர்களுக்கு வழங்க வேண்டும். உலகில் ஏனைய நாடுகளில் உற்பத்தித்திறன் மிக்க சேவையினை வழங்கும் பொருட்டு அரச, தனியார் ஆகிய இரு துறையினரும் இணைந்து சேவை வழங்குகின்றன. 

இந்த முறையினை எதிர்காலத்தில் எமது நாட்டிலும் பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டினை அபிவிருத்தி வலயங்களாகப் பிரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். நாட்டினைப் பாரியளவில் அபிவிருத்தி செய்ய நாம் தயாராகவுள்ளோம். அதற்காக முழு நாட்டிலுமுள்ள மக்கள் அரசியல், இன, மத பேதங்களை மறந்து செயற்பட வேண்டிய யுகத்திற்கு வந்துள்ளோம். இந்த அபிவிருத்தியினை செய்வதற்குரிய பணிகளை செய்யவேண்டிய கடமை அரச சேவையாளர்களான உங்களிடமிருக்கிறது. அதனால் இன்றைய தினத்தில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் நிகழ்வில் மாகாண அரச சேவையில் உள்ள சகலரும் உயர்ந்த பயனைப்பெற்றுக்கொள்ள வேண்டும். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜா, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியவதி கலப்பதி, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திலக ஜயசுந்தர ஆகியோருடன் மாகாண அரச சேவையாளர்கள் உட்பட பல பேர் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -