முஹம்மத் எஸ், எப்.முபாரக்-
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ எச் எம் எம் ஹரீஸ் அவர்களினால் திருகோணமலை மாவட்டதிற்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீடுகளில் திருகோணமலை பட்டினமும் சூழலும் மத்திய குழுவினால் முன்மொழியப்பட்டு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ எம் எஸ் தௌபீக் அவர்களின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று (30) பாடசாலை அதிபர் எம் எம் முஹைஸ் தலைமையிலும் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளருமான என் எம் மஹ்சூம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.
தொடர்ந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் மத்திய குழுவின் உறுப்பினரான மஹ்சூம் ஆசிரியரினால் ஜமாலியாப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இயங்கிவரும் கால்ப்பந்தாட்ட பயிற்சிக் கழகம் சார்பாக ஒரு வேண்டுகோளினை அவர்கள் சார்பாக முன்வைத்ததுடன் அதற்கான ஆரம்ப நிதியுதவியாக 25000 ரூபாய்க் காசோலை அவ்விடத்திலேயே பா உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்களினால் பயிற்சிக் கழகத்திற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.மேலும் எம் எஸ் தௌபீக் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஜமாலியா மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு 40000 பெறுமதியான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது.தொடந்து அங்கு உறையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தான் தொடர்ச்சியாக ஜமாலியாப் பிரதேசத்திற்கு பல உதவிகளை செய்துவந்தாகவும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் தான் செய்ய காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதனைச் தொடர்ந்து அங்கு உரையாற்றிய மாகாண சபை உறுப்பிணர் சட்டத்தரணி லாஹிர் அவர்கள் நல்லாட்சியில் எவ்வித தங்குதடைகளுமின்றி முஸ்லிம் கங்கிரஸினால் பல விதமான அபிவிருத்திப் பணிகள் மாத்திரமில்லாமல் எமது தேசியத் தலைமையினால் எமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டதுடன் இப்பகுதிக்கான அபிவிருத்திகளில் தான் தொடந்து பங்களிப்பு செயவதாக குறிப்பிட்டார்.
ஜமாலியாப் பகுதிக்கு கடந்த காலத்தில் மீனவர்களுக்கான கலங்கரை விளக்கொன்றை தமது மாகாண சபை நிதியொதுக்கீட்டில் பெற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பாக மீனவர்களின் விடயத்தில் தான் தொடர்ந்தும் அவர்களுடைய முன்னேற்றத்தில் தனது பங்களிப்பை வழங்கிவருவேன் எனவும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் ஆர் எம் அன்வர் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டார்.
பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுபினர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்ததுடன் மாகாண சபை உறுபினர்களான ஏ ஆர் அன்வர் சட்டத்தரணி ஜே எம் லாஹிர் ஆகியோர்கள் கௌரவ அதிதியாகாவும் வலயக்கல்வி பணிப்பாளர் திரு என் விஜேந்திரன் அவர்கள் விசேட அதிதியாகவும் , சிறப்பு அதிதியாக கோட்டக் கல்வி பணிப்பாளாரான கே செல்வநாயகம் அவர்களும் பாடசாலையின் முன்னாள் அதிபர் எம் எம் முஸ்தபா , ஏ எம் எம் பரீட் , முன்னால் நகர சபை உறுப்பினர் சமூக சேவையாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஏ எச் சாஹுல் ஹமீட், நூர் முஹம்மட் , விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் அங்கத்தவர்கள் மீனவர் சங்க உறுப்பினர்கள பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் வருகை தந்திருந்தனர்.



