ரிப்தி அலி-
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ், இன்று (25)
நண்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் விஜித் கே. மலல்கொட, ஒரு மாத கால
வெளிநாட்டு விஜயமொன்றை தற்போது மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, சிரேஷ்ட நீதியரசர்
ஏ.எச்.எம்.திலீப் நவாஸ், மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
முன்னிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் ஏ.எச்.எம்.திலீப் நவாஸ்
சத்தியப்பிரமானம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.