காரைதீவு நிருபர் சகா-
நட்டநடுநிசியில் திடிரென ஏற்பட்ட தீயினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரேயொரு தமிழ்க்கிராமமான திராய்க்கேணி தமிழக்கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு 11.30 தொடக்கம் 12.15 மணிவரையிலான நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
திராயக்கேணியைச்சேர்ந்த நாகலிங்ம் சந்திரநேயர் என்பவரின் வீடே இவ்விதம் தீக்கிரையானது. பாடசாலைசெல்லும் 2பெண்பிள்ளைகளுடனான இவ்ஏழைக்குடும்பம் இன்று நடுத்தெருவுக்கு வந்துள்ளது. உண்ணஉணவின்றி உடுக்க உடையின்றி நிர்க்கதிநிலையிலுள்ளனர்.காரைதீவிலுள்ள சமுகசேவையாளர் கி.ஜெயசிறில் அங்குசென்று மாணவர்க்கான உதவியைச்செய்துள்ளார்.
இத்தீ விபத்துக்கு மின்னொழுக்கே காரணமெனக்கூறப்படுகின்றது. இச்சம்பவம் இடம்பெற்றவேளை குடும்பத்தினர் கிராமத்திலுள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தனர்.அதனால் அவர்கள் தப்பியுள்ளனர் எனத்தெரிகிறது. தமக்கேற்பட்ட இழப்புதொடர்பாக அப்பகுதி கிராமசேவையாளருடாக குடும்பத்தலைவர் பொலிசாருக்கு முறைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்றுப் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.