காத்ததான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீடியா போர உறுப்பினர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி விம்பிள்டன் கல்லூரியில் போரத்தின் தலைவர் மௌலவி எஸ் எம் எம் முஸ்தபா பலாஹி தலைமையில் இடம்பெற்றது
போரத்திலுள்ள 25 உறுப்பினர்களுக்கும் டீ சேர்ட் மற்றும் மடிக்கணினி பையும் இதன்போது வழங்கப்பட்டன இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் நகர முதல்வரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் இணைப்புச் செயலாளருமான யூ எல் எம் என் முபீன் மின்சார சபையின் காத்தான்குடி அத்தியட்சகர் எம் எம் நௌபல் விம்பிள்டன் கல்லூரியின் பணிப்பாளர் உமர் பாறுக் காத்தான்குடி வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் எம் எஸ் எம் ஜாபிர் மீடியா போரத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
மேற்படி நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய தனவந்தர் எச் எம் தஸ்லீம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் விஷேட உரையினை போரத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவிலாளருமான எம் எஸ் எம் நூர்தீன் நிகழ்த்தினார்
முன்னாள் நகர முதல்வர் யூ எல் எம் என் முபீன் தனதுரையில்
காத்தான்குடி மீடியா போரமானது அண்மைக்காலமாக பல்வேறு சமூகப்பணிகளிலும் உறுப்பினர்களின் நலன்சார்ந்த விடயங்களிலும் செயற்பட்டு வருகின்ற ஒரு முன்மாதிரியான அமைப்பாகும் இதிலுள்ள அங்கத்தவர்கள் பொறுப்புணர்வுடன் செய்திகளை வெளியே கொண்டுவருவதுடன் திறமையான பலர் காணப்படுவதாகவும் இதன்போது கருத்து தெரிவித்தார் .