பைஷல் இஸ்மாயில் -
இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மட் ஜப்பார் ஆதீக் அஹமட் என்ற மாணவன் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.அப்துல் நயீம் இன்று (05) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இம்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு 90 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 17 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர். இதில் முஹம்மட் ஜப்பார் ஆதீக் அஹமட் என்ற மாணவன் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை அடைந்திருப்பதையிட்டு எமது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் எனக்கும் பெருமையாகவுள்ளது.
அதுமாத்திரமல்லாமல் அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கும் மிகப் பெரிய நற்பெயரினையும் எடுத்துக்கொடுத்துள்ள இந்த மாணவனையும் அவருக்கு கற்பித்துக்கொடுத்த ஆசிரியர், பெற்றோர் மற்றும் அம்மாணவின் கல்விக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.