இறக்காமம் மின்சார சபை தொடர்பில் மன்சூர்,உதுமாலெப்பை உரிய அமைச்சரை சந்தித்தனர்...!

ரிஜாஸ் அஹமட்- 
மின்சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் ‘இருள் நீக்கி வெளிச்சம் மிக்க தேசம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடமாடும் சேவை இன்று அம்பாறையில் இடம்பெற்றது.

இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியலாளர் மன்சூர் அவர்கள் இறக்காமம் பிரதேசத்துக்கான மின்சார சபை துணைகாரியாலயம் தொடர்பாக ஏற்கனவே ௦9/௦7/2௦16 அன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசியதட்கிணங்க இன்று மின்சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களை சந்தித்து குறித்த மின்சார சபை துணைக்காரியாலயம் தொடர்பாக முறைப்பாட்டினை முன்வைத்தார்.

குறித்த முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்கள் மேலதிக வேலைகளுக்காக அமைச்சின் செயலாளரை சந்திக்குமாறு கூறியதட்கிணங்க பொறியியலாளர் மன்சூர் அவர்கள் அமைச்சின் செயலாளர் Dr. BMS. பதகொட அவர்களை சந்தித்து பேசிய போது குறித்த துணைக் காரியாலயம் தொடர்பில் தனக்கு இது வரைக்கும் எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக பேசிய பொறியியலாளர் மன்சூர் இப்பிரச்சினை நீண்ட நாட்களாக இறக்காமத்தில் காணப்படுவதாகவும் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார் தொடர்ந்து சுமார் 2௦ நிமிடங்களுக்கு மேல் பொறியலாளர் மன்சூர் அவர்களுக்கும் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்ற பின்னர் குறித்த துணைக்காரியாலய வேலைகளை 4 மாதங்களுக்குள் நிறைவு செய்து தருவதாக அமைச்சின் செயலாளர் Dr. BMS. பதகொட அவர்கள் வாக்குறுதி அளித்தார்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களும் இறக்கமப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆலிதீன் அமீர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -