இப்பாடசாலையை மூட முயன்றனர் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

சாவியா மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலையின் அதிபர் ALU நஹீமா சலாம் அவர்களின் தலைமையில் இன்று(14.10.2016) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

பரீட்சைகள் மற்றும் ஏனைய கல்விசார் செயற்பாடுகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை கெளரவிக்கும் நோக்கில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புழ்ழாஹ் MA MP கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் "ஒரு கால கட்டத்தில் குறித்த பாடசாலையை மூடிவதற்கு முயற்சிகள் நடந்தது ஆயினும் அவை அப்போதே முறியடிக்கப்பட்டது.

இன்று நிலை மாறியுள்ளது, குறித்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளனர் எனவும் இதனைப்ப்பார்த்து தான் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுத்த அதிபர் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

இப்பரிசளிப்பு விழாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்ற மாணவிகளுக்கும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்கள், சாண்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை காலங்களில் திறமையாக செயற்பட்ட மாணவிகளுக்கும் தவணைப் பரீட்சைகளில் முதல் நிலைகளைப் பெற்றவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது . 

இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் MI சேகுஅலி , கோட்டைக் கல்விப் பணிப்பாளர் M.A.C.M.பதுர்தீன், ஹிறா பௌண்டேஸனுடைய செயலாளர் அஷ்ஷைக் A.L.M. மும்தாஸ் மதனி உட்பட பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -