ஆசிரியர்கள் பிரச்சினை தொடர்பில் பிரதமருடன் பேச்சு – அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- 
'ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து பிரச்சினைகளை தீர்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இவ்வாரம் பேச்சு வாரத்தையில் ஈடுபடவுள்ளதாக' கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட்நஸீர் தெரிவித்தார். 

வெளிமாவட்டத்தில் கடமை புரியும் ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் முன்வைத்தனர். இது தொடர்பான சந்திப்பொன்று அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவும், வெளிமாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பிலும், வெளிமாவட்டங்களில் பலவருடமாக கடமையாற்றும் ஆசரியர்களின் இடமாற்றம் தொடர்பாகவும் ஆராய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

புதிதாக கல்வியற் கல்லூரி மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் இறக்காமத்தில் 19பேரும் பொத்துவிலுக்கு 24 ஆசரியர்களும் நியமிக்கபட்டுள்ளனர்.இது தொடர்பான விடையங்களும் மேலதிகமாக ஆலோசனை செய்யப்பட்டுவதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், கல்வி மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ய முடிவெடுத்துள்ளேன்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பல வருடமாக தங்களது ஆசிரியர் சேவையை வெளி மாவட்டத்தில் மேற்கொண்டுவருகின்றனர். இதனை நாம் கருத்திற்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், அமைச்சரவையிலும், சபை அமர்விலும் பேசவுள்ளோம். அமைச்சர் தெரிவித்தார். 

பிரதமருடனான கலந்துரையாடலில் முதலமைச்சர் அல்-ஹாபிஸ் நசீர் தலைமையில், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -