க.கிஷாந்தன்-
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகரத்தில் உள்ள கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் 04.10.2016 அன்று காலை 09 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வழமையைபோல வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை 03.10.2016 அன்று இரவு 09 மணியளவில் முடித்துவிட்டு கடைகளை மூடிய பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
04.10.2016 அன்று காலை 09 மணியளவில் கடைகளை திறக்கும் போது கடைகளுக்கு முன்பாக மனித மண்டையோடுகள் கிடந்ததை கண்ட இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகளால் மண்டையோடுகளை பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.