காத்தான்குடி-5ல் வசித்து வந்த யுஸ்ரி எனும் 10 வயது சிறுமிக்கு வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்தது நாம் யாவரும் அறிந்ததே.
குறித்த மாணவி காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை எழுதினார்.
நேற்று வெளியான அதன் முடிவுகளின்படி 155 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். இது பலருக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.
சூடு வைக்கப்பட்டு வேதனைகளுக்கு மத்தியிலும் 155 புள்ளிகளைப் பெற்றது ஒரு சாதனையே. அச் சிறுமிக்கு எமது மனப்புர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறித்த சிறுமி தற்போது கெழும்பில் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.