இறக்காமப் பிரதேசத்தில் கல்வித்துறையில் சாதனை புரிந்தோரை கௌரவிக்கும் 'உன்னதம்' விழா நேற்று இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இடம்பெற்றது. இறக்காமம் மீடியா போரம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்த்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு துறைசார் நிபுனர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. இறக்காமம் ஜூம்மாப் பெரிய பள்ளி வாயலுக்கு சென்ற அமைச்சர் ரிசாட் பள்ளிவாயலின் கட்டிட நிதியாக ரூ.1 000இ000.00 வழங்கி வைத்தார்.