உலகளவில் அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களின் பெயர்ப்பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த மூவர்..!

ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Centre இனால் வருடாவருடம் வௌியிடப்படும் உலகளவில் அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்களின் 2017 ஆண்டிற்கான பெயர்ப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. கல்வி, அரசியல், மதம், நிர்வாகத் திறன், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாகக்கொண்டு இப்பட்டியல் வௌியிடப்படுகிறது.

இம்முறை இப்பட்டியலில் முதலிடம் பெற்றிருப்பவர், எகிப்து நாட்டின் முன்னாள் தலைமை முப்தியும், அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாமுமான ஷெய்குல் அஸ்ஹர் கலாநிதி அஹ்மத் தையிப் அவர்களாவர். சென்ற முறை முதலிடம் பெற்ற ஜோர்தான் மன்னர் 2வது அப்துல்லாஹ் அல் ஹுசைன் இம்முறை 2வது இடம் பெற்றுள்ளார். துருக்கி அதிபர் ரஜப் தையிப் அர்துகான் அவர்கள் 8வது இடத்தில் உள்ளார். அத்துடன் மொரித்தானிய அறிஞர் கலாநிதி அப்துல்லாஹ் பின் பைய்யாஹ், டுனீசிய அரசியல்வாதியான ராசித் கன்னூசி, கலாநிதி யூசுப் கர்ளாவி, கலாநிதி ஹம்ஸா யூசுப், ஷெய்க் பத்ஹுல்லாஹ் குலான், ஷெய்க் மஹ்மூத் எபந்தி போன்றவர்கள் முதல் 50 இடங்களைப் பெற்றுள்ளனர்.

மேலும் இப்பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்,

*அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, 

*இலங்கை முஸ்லிம் பெண்கள் பேரவையின் தலைவி ஜெஸிமா,

*இஸ்மாயில், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -