வீடியோ கதையாக்க மற்றும் புகைப்படப்பயிற்சி செயற்றிட்டத்திற்காக விண்ணப்பம் கோரல்..!


ண்டி, கொழும்பு மாவட்ட இளம் குருந்திரைப்பட, வீடியோ தயாரிப்பாளர்கள் மற்றும் புகைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வீடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகமாகப் பயன்படுத்தி, பின் தங்கிய மக்களின் கதைகளை வெளி உலகிற்கு எடுத்துக்கூறி,அச்சமூகத்தினை வலுப்படுத்தும் உத்தி முறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது. இத்தகைய கதை கூறல் மற்றும் புகைப்படங்கள் மூலம் பின் தங்கிய நிலையில் வாழும் மக்களின் சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை குறுந்திரைக் கதைகளாக மற்றும் புகைப்படங்களாக உருவாக்கலாம்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்ற மானது பேராதனை பல்கலைகழக விவசாயபட்டப்பின் படிப்பு நிறுவகத்துடன் இனைந்து முதற் கட்டமாக இச் செயற்றிட்டத்தினை மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களில் மிகவெற்றிகரமாக கடந்த வருடம் அமுல்படுத்தியது.

இதன் அடுத்தகட்டமாக கண்டி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மீண்டும் இச் செயற்திட்டத்தை தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இச் செயற்திட்டத்தின் நோக்கமானது இளைஞர், யுவதிகளிடம் உள்ள காணொலிமற்றும் புகைப்படம எடுக்கும் திறனை மேம்படுத்துவதும், அதனூடாக வெளிச்சத்திற்குவராத உண்மைச் சம்பவங்களை வெளிக்கொணர்வதுமாகும்.

18-30 வயதிற்கு இடைப்பட்டதகுதிவாய்ந்த இளைஞர், யுவதிகள் இந்த இலவச செயற்திட்டத்தில் பங்குபெறலாம். இப் பயிற்சிநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத்திகதி: 15.10.2016 அதற்கு முன்னராக உங்கள் விண்ணப்பங்களை info@ldjf என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் அல்லது தபால் மூலமாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்
இல.249/2/1, நாவலவீதி, 
ராஜகிரிய,
என்ற முகவரிக்கும் மேலதிக விபரங்களுக்கு 0776653694 . 0117209511 என்ற தொலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -