முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அஞ்சல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று முற்பகல் 10.00 மணியளவில் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.