ஹைதர் அலி-
பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்.
1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விஷேட சட்டமூலம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விஷேட சட்டமூலம் 2 வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை திரட்டி சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குகின்ற ஏற்பாடுகள் மிக விரைவாக செய்யப்படவிருப்பதால் இதற்கான விண்ணப்பப்படிவத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுடைய காத்தான்குடி காரியாலயத்திலும் கல்குடாத்தொகுதியிலுள்ளவர்கள் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையிலும் இலவசமாக பெற்றுக்கொண்டு எதிர்வரும் 2016.10.07ஆந்திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பூரணப்படுத்தி மீண்டும் ஒப்படைக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.