க.கிஷாந்தன்-
நியாயமான சம்பளத்தை தமக்கு வழங்க கோரி பெருந்தோட்ட தொழிலாளா்கள் 24.09.2016 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளா்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடந்து 18மாதங்கள் கடந்துள்ள போதிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ள தொழிற் சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் 09 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
எனினும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதுடன், பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கான நியாயமான சம்பளத்தை வழங்க முதலாளிமார் சம்மேளனம் மறுத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது பொகவந்தலாவ, பொகவான தோட்ட தொழிலாளர்களால் தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது. இதில் சுமார் 100கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனர்.
தொழிலாளா் அனைவரும் ஒன்று சோ்ந்து நமது சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வரை போராடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.