வலம்புரி கவிதா வட்டத்தின் 30வது கவியரங்கம் கடந்த பௌர்ணமி தினம் (16-7-2016) கொழும்பு அல்ஹிக்மா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். 30வது கவியரங்கிற்கு கவிஞர் போருதொட்ட ரிஸ்மி தலைமை தாங்கினார்.
கவிஞர்கள் வெளிமடை ஜஹாங்கீர், தாஜ்மஹான், எம். பிரேம்ராஜ், ஆஷிகா, சுபாஷினி பிரணவன், ஈழகணேஷ், எம்.ஏ.எம்.ஆறுமுகம், க. லோகநாதன், இளநெஞ்சன் முர்ஷிதீன், என். நஜ்முல் ஹுசைன், எஸ்.தனபாலன், மேமன்கவி ஆகியோர் கவிதை பாடினர். கவிஞர்கள் தமது பாடுபொருளாக பலவற்றைக் கொண்டனர். தமிழகத்தின் கண்ணீர் பிரச்சினையான காவிரி நீர்ப் பிரச்சினையும் அவர்களது கருப்பொருளாக அமையத் தவறவில்லை.
டாக்டர் தாசிம் அகமது, த.மணி, கட்டார் ரஷீத் எம் பியாஸ், முஸ்டீன், எஸ்.ஏ.கரீம்,ரஷீத் எம்.றியாழ், ஏ.எம்.எஸ்.உதுமான் போன்றோர் சபையை அலங்கரித்தனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ நாகூர் கனி செய்திருந்தார். வகவத்தின் தேசிய அமைப்பாளராக கவிஞர் மேமன்கவி நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.