அமெரிக்க STR share center benchmarking நிறுவனத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் பேச்சு..

ட்டக்களப்பு கெம்பஸில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உல்லாசப் பயணத்துறை, முகாமைத்துவப் பட்டதாரி பயிற்சிகள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும், அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கும் STR share center benchmarking நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஜெஸ்பர் பாம் குயிட்ஸுக்கும் இடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. 

சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணத்துறைகள் தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குகின்ற அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு பல நாடுகளில் இயங்குகின்ற STR share center benchmarking நிறுவனத்துடன் மட்டக்களப்பு கெம்பஸ் இணைந்து இலங்கையில் இருக்கின்ற மாணவர்களுக்கு உல்லாசத்துறை ஹோட்டல்துறை மற்றும் கப்பல் வேலைகள் தொடர்பான விசேட பயிற்சி ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன், மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவுள்ள உல்லாசத்துறை தொடர்பான பீடத்தை நவீன வசதிகள் கொண்டதாக அமைப்பது தொடர்பாகவும், சர்வதேச STR share center benchmarking நிறுவனத்தின் இலங்கைப் பிரதநிதியாக மட்டக்களப்பு கெம்பஸ் இயங்குவது தொடர்பான கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை உல்லாச ஹோட்டல் கழகத்தின் தலைவர் டாக்டர். பிரபாத் உக்குவத்தவும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -