இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லீம் சேவைக்கு பணிப்பாளர் இல்லை- மனோ





அஷ்ரப் ஏ சமத்-

லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லீம் சேவைக்கு ஒரு பணிப்பாளா் நியமிக்கப்படாமல் இருப்பதனையிட்டு நாம் மிகவும் மனவேதனை அடைகின்றேன். அதற்காக முஸ்லீ்ம் அமைச்சா்களால் முடியாவிட்டால் நான் அதற்காக குரல் கொடுத்து அதனை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். என அமைச்சா் மனோ கனேசன் இன்று முஸ்லீம்கள் மத்தியில் தெரிவிப்பு

இன்று(7) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றிய எம். இசட் அகமத் முனவரின் இலங்கை வானொலி முஸ்லீம் சேவை 1950 ஆண்டு இருந்து இன்று வரை என்ற நுால் வெளியீடும் 25 ஆலிம்களை கௌரவிப்பு நிகழ்வும் கொழும்பு பொது நுாலகத்தின் கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அமைச்சா்களான றிசாத் பதியுத்தீன், பைசா் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், அமைச்சா் மனோ கனேசனும் கலந்து சிறப்பித்தனா்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சா் மனோ கனேசன் மேற்கண்டவாறு தெரிவித்தாா். அவா் தொடா்ந்து உரையாற்றுகையில் - இங்கு உரையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளா் என். எம் அமீன் கண்னீா் மல்க ஆற்றிய உரையில் ” கடந்த நோன்பு மாதத்திற்கு ம்டும் முஸ்லீம் சேவையில் 3 கோடி ருபாவை விளம்பரமாக முஸ்லீம் வா்த்தகா்கள் கொடுத்துள்ளனா். ஆனால் பதியுத்தீன் மஹூமுத், அலவி மொளலான போன்றோா்கள் இலங்கை வானொலியில் முஸ்லீம் நிகழ்ச்சியயை இந்த அளவுக்கு கொண்டு வந்தனா். அந்த சேவையில் தற்பொழுது 10 முஸ்லீம் அதிகாரிகள் கூட இல்லை. அகமத் முனவா் ஓய்வு பெற்றத்திற்குப் பிறகு இங்கு இதுவரை முஸ்லீம் சேவைப் பணிப்பாளா் நியமிக்கப்பட வில்லை எனக் கூறினாா். தற்போதைய எஸ்.எம் ஹணிபா பதில் கடமையே ஆற்றி வருகின்றாா். இந்த அளவுக்கு முஸ்லீம்களுடைய ஊடகம் மத சம்பந்தமான நிகழ்ச்சிகள் உள்ளதாக மிகவும் ஆதங்கமாக தெரிவித்தாா்.”

நான் மொழி இனம் ஜக்கியம் சம்பந்தமான அமைச்சா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் முஸ்லீம் சேவைப் பணிப்பாளர் பதவியை பெற்றுத் தர நான் நடவடிக்கை எடுப்பேன். என அங்கு தெரிவித்தாா்.

அமைச்சா் பைசா் முஸ்தபா - இன்னும் முஸ்லீம்களது பிரச்சினையினைகளில் அரசியல் இலாபம் கொண்டு இழுபரி நிலையில் முஸ்லீம் தலைவா்கள் ஈடுபடுகின்றனா். இன்னும் அளுத்கம, கிராண்பாஸ் சம்பவங்களில் ஒரு நிரந்தர தீர்வை நாம் பெற்றுக் கொள்ள வில்லை. எமக்குளளே பல பிரிவுகள் ஒரு விடயத்தை செய்யப்போனால் இன்னொரு அரசியல் கட்சி அதற்கு தடை விதிக்கின்றது. இப்படியாக நாம் பிரிந்தால் எமது சமுகத்திற்கும் எதனையும் நாம் அடைய முடியாது என அமைச்சா் பைசா் முஸ்தபா அங்கு தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -