"மாகாணசபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வு சம்மந்தமான மாநாடு"

மாகாணசபைகளின் புதிய அதிகாரப் பகிர்வும் அதற்கான தீர்வும் சம்மந்தமான மாநாடு இன்று (06)  நீர்கொழும்பு ஹெரிடேன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கிய ஜோதி சரவணமுத்து தலைமையில் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் இலங்கையின் சகல மாகாண முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இங்கு கலந்து கொண்டு ஒவ்வொருவரும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் முக்கியமான விடையங்களை முன்வைத்தனர். 

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு உரையாற்றும்போது: 

இன்றைய மாகாண அதிகாரங்கள் பெயரளவிலேயே இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் எங்களால் ஒரு விடையத்தையேனும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. உதாராணமாக கடந்த வாரம் கிழக்கில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன ஆனால் அதில் வயதெல்லை குறிப்பிடப்பட்டிருந்தது. இதுசம்மந்தமாக நான் அவசரமாக இது தொடர்பானவர்களைத் தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசின் நடவடிக்கை என்று பர்பில் கிடைத்தது.

ஆனால் இங்கு நடைபெறும் இந்த முக்கிய இம்மாநாட்டில் கூறிவைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் இடம்பெயர்வுகள் காரணங்களில் கல்வியைப் பின்போட்ட மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியதன் காரணமாக வயதெல்லைகள் கூடிய பட்டதாரிகள் இன்று அதிகமானவர்கள் காணப்படுகின்றனர். எனவே உடனடியாக விண்ணப்பம் கோரப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பம் கோரலில் உடனடியாக வயதெல்லையை மாற்றவேண்டும் என்பதனை இம்மாநாட்டில் கூறிவைக்க விரும்புகிறேன். என்று தெரிவித்தார். 

இம்மாநாடு இரண்டு நாட்களாக இன்றும் நாளையும் 06/07 ஆகிய இரு நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இந்நிகழ்வின் நடாத்துனர்களாக மாற்றுக்கொள்கை நிலையம் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கிய சோதி சரவண முத்து மற்றும் அதன் செயலாளர் கலாநிதி அசங்க வெலிகல சிரேஷ்ட ஆய்வாளர் ஆகியோர் செயற்படுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -