266 குடும்பங்களுக்கு தொடா் மாடி வீடுகள் இன்று கையளிப்பு

அஷ்ரப் ஏ சமத்-

மாளிகாவத்தையில் பிரதீபா மாவத்தையில் முடுக்கு வீடுகளில் வாழும் 266 குடும்பங்களுக்கு தொடா் மாடி வீடுகள் நேற்று  (5) வெள்ளிக்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

இத்திட்டம் கடந்த அரசில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. தொடா்ந்தும் இத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு . நிதி வசதிகள் இன்றி காணப்பட்டன. இத்திட்டத்தினை தொடா்ந்து நகர அபிவிருத்தி மேல்மாகாண மெஹா பொலிஸ் அமைச்சா் சம்பிக்க ரணவக்காவினால் தலைமையில் மீள்அமைக்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டன. இவ் வீடமைப்புத் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோா் தலைமையிலேயே நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அமைச்சா்களான பைசா் முஸ்தபா ரவி கருநாயக்கா, பாரளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி -

கொழும்பு நகரில் முடுக்கு வீடுகள் 66 ஆயிரம் உள்ளன. இதில் பலகை வீடுகள், கடலோரம், மனித வாழ்வுக்கு பொருத்தமற்ற சட்டவிரோத வீடுகள்க என 75 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா்.. இவா்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கவென உரிய நிதியை நிதியமைச்சா் வழங்கப்படல் வேண்டும். கொழும்பு நகரின் வீடமைப்பு பொறுப்புக்கள் சிறந்த மற்றும் பொறியியலாளருமான சம்பிக்க ரணவக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மஹிந்த ராஜப்கச அரசு கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களை துரத்தி வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்ல முற்பட்டாா். அதனை இந்த மக்கள் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி முறியடித்துள்ளனா். ஆர் பிரேமதமதாசவின் வீடமைப்புத் திட்டத்திற்கு பிறகு எவ்வித வீடுகளும் கொழும்பில் நிர்மாணிக்கப்படவில்லை. 


பாராளுமன் உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மாளிகாவத்தை பிரதேசத்தில் கல்வித் தரத்தினை உயா்த்துவதற்கு பாடசாலைகளை தரமுயா்த்துவதற்காக கோரிக்கை விடுத்துள்ளாா். இதனை நாம் நிர்மாணித்து தருகின்றோம். முதலில் பாடசாலை நிர்மாணிக்க மாளிகாவத்தையில் காணியொன்றைப் பெற்றுத் தாருங்கள். கொழும்பில் உயா்தரததில் 10 வீதம் கூட பரீட்சையில் சித்தியடைவதில்லை. சாதாரண தரத்தில் கூட 50 வீதம் கூட சித்தியடைவதில்லை. ஆகவே இப்பிரதேசத்தில் பாடசாலையோ, வீடுகளையோ நிர்மாணித்தாலும் போதைப்பொருள் பாவனையையும் விற்பனையை நிறுத்துங்கள். 

இதற்காக பள்ளி வாசல், பண்சலைகள், கோவில்கள் இணைந்து இளைஞா்களை மாணவா்களை நல்வழியில் செயல்படுத்துவதற்கு நல்ல ஒரு ஆண்மீக ரீதியில் திட்டமொன்றை வகுத்து செயல்படுத்துங்கள், இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்களை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச சமாஜம் துரத்தி இப் பிரதேசத்தினை ரேஸ், களப்புக்களை நிர்மாணிப்பதற்கே முற்பட்டா். இலங்கையில் எவ்வாறுதான் நாம் அபிவிருத்தி செய்தாலும், கொழும்பு தலைநகரில் வாழும் முடுக்கு வீடுகள் இருக்கும்போது நாடு முன்னேற்றம் அடைந்து விட்டது எனக் கூற முடியாது.

 கொழும்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களது வாழ்க்கைத் தரம் உயா்த்தப்படல் வேண்டும். என பிரதம மந்திரி அங்கு உரையாற்றினாா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -