தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணம்..!


பி.எம்.எம்.ஏ. காதர்-

மிழர்கள் எழதிய இலக்கிய வரலாற்று நூல்களிலே முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் பற்றி எந்த விடையங்களும் எழுதப்படாததனாலே மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டது என இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டின் அப்போதய பிரதம செயற்பாட்டாளரான தாஜூல் அதீப் எஸ்.ஏ.ஆர.;எம்.செய்யது ஹஸன் மௌலான தெரிவித்தார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டின் அத்திவாரம் மருதமுனையிலேயே இடப்பட்டது இந்த மாநாட்டின் ஐம்பது ஆண்டு நிறைவின் நினைதல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை(24-07-2016)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அஷ்ரப் ஞாகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது இங்கு தலைமையுரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டு ஞாபகார்த்த அமையம்' ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் மருதமுனை பிரதேசத்தைச் சேர்ந்த கல்விமான்கள், இலக்கியவாதிகள்,ஊர்பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :- மருதமுனையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டின் வரலாறு இப்படி உயிர் பெற்று எழுந்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாடு மருதமுனையில் நடாத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை நான் சொல்ல வேண்டும்.

நான் சிறுவனாக இருந்த காலத்திலே எல்லாவகையான நூல்களையும் வாசிப்பதுண்டு.அப்படி வாசிக்கின்ற போது பல இருட்டடிப்புக்களைக் காண முடிந்து. அந்த வகையில் செல்வநாயம் எழுதிய இலக்கிய வரலாற்றைப் வாசிக்கின்றபோது அதில் முஸ்லிம்களைப் பற்றியோ அல்லது முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் பற்றி எந்த விடையங்களும் இல்லை.

அதே போன்று ஆறுமுக நாவலர் பிறந்த அந்த யாழ்பாண மண்ணிலே அவர் பிறப்பதற்கு முன் வாழ்ந்த பதுறுத்தீன் புலவர் இலக்கியக் காப்பியத்தைப் படைத்தார் அது கூட அந்த இலக்கிய வரலாற்று நூலில் இல்லை.பதுறுத்தீன் புலவர் படைத்த இலக்கியக் காப்பியத்தை போன்று யாழ்பாணத்தில் இதுவரை யாரும் படைக்கவும் இல்லை.இந்த இருட்டடிப்புக்கள்தான் மருதமுனையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டினை நடாத்தவதற்காண உந்த சக்கியாக மாறியது என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டின் அப்போதய பிரதம செயற்பாட்டாளரான எஸ்.ஏ.ஆர.;எம்.செய்யது ஹஸன் மௌலான மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் பொன்னாடைகள் போர்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாடு 1966-பெப்ரவரி 27ஆம் திகதி சனிக்கிழமைகாலை 9.00மணிக்கு அப்போதய மருதமுனை அல்மனார் மகாவித்தியாலய மண்டபத்தில்(தற்போதய மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி)நடைபெற்றது.இந்த மாநாடு தொடர்பான அழைப்பிதழில் விழாக் குழுத்தலைவராக அல்மனார் வித்தியாலய அதிபர் ஏ.அகமட் லெப்பையின் பெயரும்,மாநாட்டின் பிரதம அமைப்பு நிருவாகியாக தாஜூல் அதீப் எஸ்.ஏ.ஆர.;எம்.செய்யது ஹஸன் மௌலானவின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்றைய மாநாட்டில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் படைக்கப்பட்ட காப்பியங்கள்,காவியங்கள் முதலான இலக்கியப் படைப்புக்களைப் பற்றி அறிஞர் பெருமக்கள் முழமைபெற்ற திறனாய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

'இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாட்டு ஞாபகார்த்த அமையம்' எதிர்காலத்தில் 'இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராச்சி மாநாடு தொடர்பில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கத்தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -