யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அமர்வு..!

பாறுக் ஷிஹான்-
யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகளின் மீள்குடியேற்றம் தொடர்பான அமர்வு, 27 ஆம் திகதி சனிக்கிழமை யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அமர்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி திரு. மைக்கல் தாசன், யாழ் நகர அபிவிருத்தி திட்டமிடல் தொடர்பான விளக்கவுரை ஒன்றினை நிகழ்த்தினார். அடுத்து, மீள்குடியேற்றம் தொடர்பிலான அரசாங்க நடைமுறை குறித்த விளக்கம், யாழ் உதவி அரசாங்க அதிபர் முரளிதரனினால் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து யாழ், கிளிநொச்சி சிவில் சமூகப் பிரதிநிதிகள், மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் குறித்து தெரிவித்தார்கள், அவர்கள் தெரிவித்த விடயங்கள் அவ்விடத்திலேயே ஒரு ஆவணமாக தொகுக்கப்பட்டன. இந்நிகழ்வில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பிரதிநிதி நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத்ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேற்படி அமர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் யாழ் முஸ்லீம் மக்களும் அதனுடன் இணைந்த யாழ் கிளிநோச்சி முஸ்லீம் சம்மேளனமும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு பகிஸ்கரித்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -