தம்புளை ரங்கிரி ரஜமகா விகாரையின் கீழ் உள்ள உயன்வத்தை புராதன விகாரை நேற்று மாலை தீப்பற்றியுள்ளது. இதன்போது, பிக்குகள் தங்கும் விடுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களும், தீயணைப்புப் பிரிவும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மின்கசிவு இந்த தீக்கான காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விகாரையில் சிறிய பிக்குகள் பயிற்சி நிலையமொன்றும் ஆண் பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிலையமொன்றும் நடாத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. உடுத்திருக்கும் ஆடையைத் தவிரவுள்ள சகல பொருட்களும் தீயில் அழிந்துள்ளதாக அதன் விகாராதிபதி ஹல்மில்ல வெவே பிரேமரத்ன தேரர் கூறியுள்ளார்.