ஐ.ஏ.காதிர் கான்-
மினுவாங்கொடையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அட்டாளைச்சேனை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, (27)சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில், கல்லூரி பணிப்பாளர் டாக்டர். எம்.எச்.எம் முனாஸிக் தலைமையில்நடைபெற்றது.
நிகழ்வில் டாக்டர் முனாஸிக் உரையாற்றுகையில்:
கல்வியைக் கற்றுக் கொடுக்கப்பதையும், அதனைக் கற்றுக் கொள்வதையும் எந்தவொரு மதப் புத்தகமும் தவறெனக் கூறவில்லை. இதே போன்று, எந்த சட்டப் புத்தகத்திலும் இது குற்றமென்று கூறப்படவுமில்லை. ஆனால், கற்பதைக் கொண்டு செயல்படும் போது அந்தந்த நாட்டின் சட்டதிட்டதின் கீழ் செயல்படவேன்டும். கல்வி கற்று கொடுப்பதை பிழை என்று விமர்சகம் செய்பவர்களும், அதனைக் குறைகூறுபவர்களும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் குடும்பங்களுக்கு மத்தியில் பிளவுகளை உருவாக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று தெளிவுபடுத்தினார்.
இதன் போது ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்குகான கருத்தரங்கமும் பெற்றோர்களின் நலன்கருதி அடிப்படை ஆங்கிலக்கல்வி பகுதி ஒன்றைப் பூர்த்தி செய்த பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
டாக்டர் எம்.எச்.எம்.முனாஸிக் ,கல்லூரியின் சர்வதேச மாணவ ஒருங்கிணைப்பாளரான பொறியியலாளர் சுப்யான் ஏ வஹாப் உரையாற்றியதோடு பிரபல பாடகர்களான மருதமுனை கமால், அக்கரைப்பற்று நபீல் ஆகியோர் இஸ்லாமிய கீதங்களைப்பாடினர்.