அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனைக்குடி பிரதேசத்தில் நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபையினால் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமதின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வேலைத் திட்டத்தின் பிரகாரம் கல்முனைக்குடி பிரதேசத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அனைத்தையும் மொத்தமாக அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்..
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் நாளை காலை 6.30 மணி தொடக்கம் குப்பைக்கழிவுகளை பொதி செய்து, தத்தம் வீடுகளுக்கு முன்னால் வைக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று ஆணையாளர் மேலும் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருந்து சுமார் 80 ஆயிரம் கிலோ கிராம் குப்பை கூளங்கள் சேகரித்து அகற்றபட்டமை குறிப்பிடத்தக்கது.