முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழிப்போம் என்று சொன்னவருக்கு எதிராக பிரதமர் நடவடிக்கை - உலமா கட்சி பாராட்டு

முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் அழிப்போம் என பகிரங்கமாக சொன்னவருக்கெதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உலமா கட்சி வேண்டிக்கொண்டதற்கிணங்க மேற்படி நபருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, பொலிஸ் மா அதிபரை பணித்திருப்பதை உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் இதற்காக பிரதமரை பாராட்டியுமுள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, 

நாட்டில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் ஏற்படுவதன் மூலமே நாட்டின் நல்லாட்சி உறுதிப்படுத்தப்படும். இத்தகைய நல்லிணக்கம் உரிய முறையில் செயற்படுத்தப்படாமல் சிறுபான்மை சமூகங்களின் சமயத்தலங்கள் மீதும் சமயங்கள் மீதும் மற்றொரு சமயத்தை சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டதும், பழிச்சொற்களால் அவமதித்ததும் அவற்றுக்கெதிராக அரசாங்கம் தானாகவே தலையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க தவறியதுமே கடந்த அரசாங்கம் வீழ்வதற்கு பிரதான காரணமாகும்.

இந்த வகையில் அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போது அதனை குலைக்க முற்பட்ட சிலர் முஸ்லிம்களுக்கெதிராக வசை பாடியதையும், ஒருவர் முஸ்லிம்களை அரை மணி நேரத்தில் இந்நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டுவோம் என பகிரங்கமாக கூறியும் அவருக்கெதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்காததை உலமா கட்சி ஊடகங்கள் வாயிலாக தட்டிக்கேட்டது.

தற்போது கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் இதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ் மா அதிபரை வேண்டியுள்ளமையை உலமா கட்சி பாராட்டுகிறது. அதே வேளை இவருக்கெதராக உண்மையாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உலமா கட்சி தொடர்ந்தும் கவனிக்கும் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -