சுதந்திரமான மற்றும் சமாதானமான இலங்கையை கட்டியெழுப்புவதற்காக #DifferentYetEqual (வித்தியாசம் இருப்பினும் சமம்) என்ற அமைப்பு முன்னெடுக்கும் அமைதிப் பேரணி ஒன்று இன்று (15) பிற்பகல் 4.30 மணிக்கு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமானது.
இதேவெளை குறித்த இடத்திற்கு வந்த சிங்கலே அமைப்பு வித்தியாசம் இருப்பினும் சமம் என்ற அமைப்பு முன்னெடுக்கும் பேரணிக்கு முன் சிங்கலே கொடியை ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு அமைதியின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்.