சரத் ஹெட்டியாராச்சி பாதிரியின் வாழ்வு மற்றும் சேவைகள் பற்றிய நூல் வெளியீட்டு விழா..!

ரத் ஹெட்டியாரச்சி பாதிரி அவர்கள் நமது நாட்டின் சமய மற்றும் கலாச்சாரங்களின் முன்னோடியாக கருதப்படுவதோடு அனைத்து மக்கள் மத்தியிலும் அறிமுகம் பெற்றவராக இருக்கிறார். அவர் தேசியத்தின் ஒற்றுமைக்காக பல சமய நிகழ்வுகளை நடத்தியுள்ளார். இன மற்றும் மத முரண்பாடுகள் உள்ள குழுக்கள்; மத்தியில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த பெரிதும் பாடுபட்டு வருகின்றார்.

அவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாக இருந்தும் பல பௌத்த சமயத்தலைவர்களினதும், இஸ்லாம், ஹிந்து மத தலைவர்களின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார். அவர் அனைத்து மதங்களையும் நேசிக்கக்கூடியவர், மதிக்கக்கூடியவர். தனிப்பட்ட வகையில் உள்ளத்தில் கொஞசம் கூட பொறாமையுள்ளவராக நான் கண்டதில்லை. தன்னைப்போல் மற்றவர்களும் சிறப்புற்று வாழ நினைப்பவர். 

நாட்டை முப்பது வருட கால யுத்தம் பீடித்திருந்த போது, அவர் மக்களுக்கு அமைதியை கற்றுக்கொடுக்கும் வகையில் பல நிகழ்வுகளை மல்லாவி, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் நடத்தினார். சமாதானத்துக்காகவும், நாட்டைம மீள கட்டியெழுப்புவதற்காகவும் பல தமிழ் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பல கலாசார நிகழ்வுகளை நாட்டின் பல பாகங்களிலும் நடத்தியுள்ளார்.

'அனைவருக்கும் நத்தல்', 'கோயில் பன்சலை, சிங்கள, தமிழ் புது வருடம்', 'சமாதான பாடல்', என்பவை பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்ட நிகழ்வுகளாகும். இத்தகைய நிகழ்வுகளால் வேறுபாட்டில் ஒற்றுமை காண்பதன் மூலம் தேசிய சமாதானத்துக்கான புரிந்துணர்வை மக்களுக்கு தெளிவு படுத்தின. இந்நிகழ்வுகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கல்முனை, கம்பஹ, கொழும்பு, அம்பேபுஸ்ஸ போன்ற பகுதிகளில் சக மனிதருடன் சமாதானமாக வாழ்தல் என்ற தொணிப்பொருளை விளக்குவதற்காக நடத்தப்பட்டன.

பாதிரி சரத் ஹெட்டியாராச்சி அவர்கள் பேராதெனிய பல்கலைக்கழகம், இந்தியாவின் சேரன்புர கல்லூரி, களனி திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றின் பட்டதாரியாவார். அவர் பல நூல்களை தனது மாணவி செல்வி. இந்திக்கா பெர்னான்டோவின் உதவியுடன் எழுதி வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் பிரதமர் விருது உட்பட பல ஜனாதிபதி விருதுகளையும் பெற்றுள்ளதுடன் ஜனாதிபதி இணைப்பாளராகவும் செயலாற்றியுள்ளார்.

அவர் தற்போது கடுமையான சுகயீனமுற்ற நிலையில் உள்ளார். நாட்டையும், தேசிய சமாதானத்தையும் நேசிக்கக்கூடிய அனைவரும் அவரது சுகத்துக்காக ஆதரவு வைப்பது அவர்கள் மீதான பொறுப்பாகும். இந்த வகையில் அவரது சுகத்துக்காக உதவும் வகையில் அவரது 54வது பிறந்த தினத்தையொட்டி அவரது வாழ்வு மற்றும் சேவைகள் பற்றிய டி வி டி வெளியீட்டு விழா எதிர் வரும் செப்டம்பர் மாதம் 24ந்திகதி நடைபெறவுள்ளது.

நாட்டுக்கான அவரது சேவைகளுக்காக அவருக்கு நாம் நன்றி கூறுவதற்காக அதில் கலந்து கொள்வோம். அதே வேளை அவரது சுகத்திற்காகவும் நாம் பிரார்த்திப்பதுடன் அவரது சேவைகள் நாட்டுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டுவோம். 

மௌலவி முபாறக் அப்துல் மஜீத்,
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -