றபீக் சர்றாஜ் மூதூர்-
மூதூர் உதைப்பந்தாட்டத் துறை வரலாற்றில் மிகச்சிரப்பாக ஒரியன் வெற்றிக் கிண்ணம் ஒரு மாதகாலமாக தெரிவுப் போட்டி நடாத்தப்பட்டு இன்று இதன் இறுதிப்போட்டி நடாத்தப்பட்டதுஒரியன் கென்ரக்சன் உரிமையாளர் அப்துல் ஜாயா அனஸ் இன்றைய இறுதிபபோட்டியை மிகச்சிறப்பாக நடாத்தி முடித்தது பாராட்டத்தக்கது
இன்றைய இறுதிப் போட்டிக்கு ஈராக் மற்றும் ஹைரியா அணிகள் மோதிக் கொண்டன இறுதிவரை இறு அணிகளும் பலமாக போராடியும் எந்த அணியாலும் கோல் போட முடியவில்லை
இதனையடுத்து பனால்டிக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது அதிலும் இறு அணிகளும் சமநிலையில் கோல்கள் போட மீண்டும் ஒவ்வொரு அணிக்கும் ஒரு சந்தர்ப்பம் வளங்கப்பட்ட நிலையில் ஹைரியா அணியினால் கோல் ஒன்றினை போட்டு வெற்றியின் இலக்கினை அடைந்தனர்
மக்கள் இதுவரை கண்டிராத மிகவும் சுவாரசியமான போட்டியாக இப்போட்டி காணப்பட்டது குறிபப்பிடத்தக்கது
இந்நிகழ்வுக்கு அதிதியாக திருமலை பாரளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜே.எம் லாஹிர் ,முன்னால் பிரதேசசபை தவிசாளர் எச்.எம் . ஹரீஸ் பிரதேச சபை செயலாளர் எம்.நஜாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


