எப்.முபாரக்-
திருகோணமலை கிண்ணியா பகுதியில் கைக்குண்டு ஒன்றினை வைத்திருந்த ஒருவரை அடுத்தமாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று திங்கட்கிழமை (29) உத்தரவிட்டார். வான்எல,முஸ்லிம் கொலனி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீடுடைப்பு,திருட்டு மற்றும் சண்டை போன்ற குற்றச்சாட்டு வழக்குகள் கந்தளாய்,திருகோணமலை,மற்றும் மூதூர் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் கைக்குண்டொன்று தம் வசம் வைத்தீருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போதே மோட்டார் சைக்கிளினுள் கைக்குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சந்தேக நபரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (29) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனார்